பெண் வயிற்றில் இருந்த 36 கிலோ கேன்சர் கட்டி! ராட்சத கேன்சர் கட்டியை அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை!!

Photo of author

By Sakthi

பெண் வயிற்றில் இருந்த 36 கிலோ கேன்சர் கட்டி! ராட்சத கேன்சர் கட்டியை அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை!!

 

பெண்ணின் வயிற்றில் இருந்த 36 கிலோ எடை கொண்ட ஓவேரியன் இராட்சத கேன்சர் கட்டியை நுட்பமான அறுவை சிகிச்சை மூலமாக அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். பெண்ணின் வயிற்றில் இருந்த இந்த 36 கிலோ எடை கொண்ட கேன்சர் கட்டி உடலின் சாரிபாதி எடையுள்ளதாக கூறப்படுகின்றது.

 

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி தமிழ் செல்வி அவர்கள் கடந்த மூன்று வருடங்களாக வயிறு வலி, வயிறு வீக்கத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார். வயிறு வீக்கம் பெரிதாகி மூச்சு விட திணறியதைத் தொடர்ந்து தமிழ்செல்வி அவர்கள் இராமநாதபுரம் அருகே உள்ள வி.ஜி.எம் கேஸ்ட்ரோ மற்றும் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைக்கு சிகிச்சை எடுக்க வந்தார்.

 

சிகிச்சைக்காக வந்த தமிழ்செல்வி அவர்களை சர்ஜிக்கல் கேஸ்ட்ரோ என்ரோலஜிஸ்ட் மருத்துவர் மோகன் பிரசாத் அவர்கள் தமிழ்செல்வி அவர்களின் வயிறு பகுதியை பரிசோதித்து ஸ்கேனில் பார்த்தார். அப்போது தமிழ்செல்வி அவர்களின் வயிற்றில் இராட்சத கேன்சர் கட்டி வளர்ந்திருப்பது தெரியவந்தது.

 

சினைப் பகுதியில் உருவான இந்த கேன்சர் கட்டி நுரையீரல், குடல், சிறுநீரகம், ரத்தநாளங்கள் போன்ற முக்கிய உறுப்புகளை அழுத்திக் கொண்டிருந்தது. இந்த நிலையில் சர்ஜிக்கல் கேஸ்ட்ரோ என்ரோலஜாஸ்ட் துறைத் தலைமை மருத்துவர் கோகுல் அவர்களின் தலைமையில் கேஸ்ட்ரோ துறை, சிறுநீரகத்துறை, ரத்தநாளங்கள் துறை, மயக்கவியல் துறை ஆகிய துறைகளை சேர்ந்த நிபுணர்களுடன் தமிழ்செல்வி அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

 

சுமார் 4 மணி நேரம் 30 நிமிடம் வரை இந்த அறுவை சிகிச்சை நடந்தது. இந்த அறுவை சிகிச்சையின் முடிவில் தமிழ்செல்வியின் வயிற்றிலிருந்த 36 கிலோ எடை உள்ள  ஓவேரியன் இராட்சத கேன்சர் கட்டியை மருத்துவர்கள் அகற்றினர். இந்த கேன்சர் கட்டியின் எடை சிகிச்சைக்கு வந்த தமிழ் செல்வியின் உடல் எடைக்கு சரிபாதியாக இருக்கின்றது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது தமிழ்செல்வி அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

உடல் குறைபாடுடன் சிகிச்சைக்காக வந்தவரின் உடலில் இருந்து 36 கிலோ எடை கொண்ட கேன்சர் கட்டி அகற்றப்படுவது இது இரண்டாவது முறையுகும். முன்னதாக எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு 40 கிலோவிற்கும் அதிகமான எடை கொண்ட கேன்சர் கட்டி அகற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.

 

இந்த நிலையில் வி.ஜி.எம் மருத்துவமனை மருத்துவர்கள் செய்த இந்த அறுவை சிகிச்சை இந்திய அளவில் இரண்டாவதாகவும் தமிழ்நாடு அளவில் முதலாவது பெரிய கேன்சர் கட்டி என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நுட்பமான அறுவை சிகிச்சையை செய்த மருத்துவர்கள் 40 வயதுக்கு மேல் இருப்பவர்கள் உரிய முறையில் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுதித்தியுள்ளனர்.