தமிழ்நாட்டுக்கு 38 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்… கர்நாடக மாநிலத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு…
தமிழ்நாட்டுக்கு 38 டிஎம்சி அளவு தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது கூட்டம் காவிரி மேலாண்மை ஆனைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று(ஆகஸ்ட்11) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சார்பாக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா அவர்களும், காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்பிரமணியன் அவர்களும் கலந்து கெண்டனர்.
இந்த 22வது ஆலோசனைக் கூட்டத்தில் தற்பொழுது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளி மழை பெய்து வரும் நிலையில் காவிரிக்கு நீர் வரத்து எவ்வாறு இருக்கின்றது? கர்நாடக அணைகளில் நீர்வரத்து எவ்வாறு இருக்கின்றது? நீர் வெளியேற்றம் எவ்வளவு? நீர் இருப்பு எவ்வளவு போன்றவை விவாதிக்கப்பட்டது.
அப்பொழுது கடந்த ஜூன் மாதம் கர்நாடக அரசு தமிழகத்திற்கு கடந்த ஜூன் மாதம் காவிரில் இருந்து 26.3 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடுவதாக கூறிவிட்டு 3.78 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறந்து வைத்தது. மீதம் உள்ள 22.54 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்தவிட வேண்டும். இதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆனால் கர்நாடகா இதற்கு மறுப்பு தெரிவித்து பேசியதால் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சக்சேனா தலைமையிலான அதிகாரிகள் அனைவரும் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
இதையடுத்து இந்த ஆலேசனை கூட்டம் சுமார் மூன்றரை மணிநேரம் நடைபெற்றது. இதையடுத்து ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்திற்கு 38 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து வழங்க வேண்டும் என்று கார்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.