திருப்பூர் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு:! மின்தடைதான் காரணமா?
திருப்பூர் அரசு மருத்துவமனையில் இன்று காலை முதல் மாலை வரை நான்கு கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் தாராபுரம் பகுதியில் திருப்பூர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.இங்கு தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில்,
கொரோனா சிகிச்சைபெற்று வந்த கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து 4 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு காரணம்,திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட மின் தடையினால்தான் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால்,65 வயது உடைய கௌரவன் 60 வயதுடைய யசோதா உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட பொழுது அவர்கள் கொரோனா பாதிப்பால்தான் உயிரிழந்து உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து மருத்துவமனையில் கட்டுமான பணிகள் நடைபெற்றுவரும் காரணத்தால் கட்டட கான்ட்ராக்டர் ஒருவர் மின்சார இணைப்புகளை துண்டித்து விட்டதாக கூறியுள்ளார்.இதனை அடுத்து கட்டிட ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இருந்தபொழுதிலும் உறவினர்கள் மருத்துவமனையின் அலட்சியத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.

