அரசு பஸ் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!
ஈரோடு மாவட்டம் அருகே துக்க வீட்டிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த,இரண்டு பைக்கில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் அரசு பேருந்து மோதியதில் உயிரிழப்பு.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே குளூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். அவரும் அவருடைய தாயாரும் ஒரு பைக்கிலும்,
பாலசுப்பிரமணியத்தின் அக்கா மற்றும் அவருடைய மாமா ஒரு பைக்கிலும்,சோலார் அம்மன் நகரிலுள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு,நேற்று காலை வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது,மொடக்குறிச்சி அருகே லாக்புரம் புதுவலசு பகுதியில் அருகே வந்த அரசு பேருந்து இந்த இரண்டு பைக்குகள் மீது மோதியது.இதில் பைக்கில் வந்த நான்கு பேரும் அருகே உள்ள தடுப்பு சுவற்றில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.