இந்த மாவட்டத்தில் இன்று 4 தாலுகாவிற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

0
110

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலிருக்கின்ற உதகை, கூடலூர், பந்தலூர் மற்றும் குண்டா உள்ளிட்ட 4 தாலுகாக்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலை தேர்வு உண்டாக்கிருக்கிறது. இதனால் அங்கே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே மாவட்டத்தில் இருக்கின்ற நான்கு தாலுகாக்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே இன்று வட தமிழகம், தேனி, தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது .

நாளை மற்றும் நாளை மறுநாள் உள்ளிட்ட தினங்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களில் ஒரு பகுதிகளில் சார்ந்த முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

அதோடு 16ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

Previous articleவாடிக்கையாளர்களுக்கு நற்செய்திகளை வெளியிட்ட தேசிய மற்றும் தனியார் வங்கிகள்!
Next articleஇங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அலறவிட்ட பூம்ரா & கோ… 50 ஓவர்களில் முடிந்த போட்டி!