சட்டசபை தேர்தலில் பெண்கள் போட்டியிட 40 % வாய்ப்பு! உறுதியளித்த பிரியங்கா காந்தி!

Photo of author

By Hasini

சட்டசபை தேர்தலில் பெண்கள் போட்டியிட 40 % வாய்ப்பு! உறுதியளித்த பிரியங்கா காந்தி!

Hasini

40% chance for women to contest assembly elections! Priyanka Gandhi promised!

சட்டசபை தேர்தலில் பெண்கள் போட்டியிட 40 % வாய்ப்பு! உறுதியளித்த பிரியங்கா காந்தி!

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 40 சதவிகித தொகுதிகளில் பெண்கள் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாக காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தரப்பிரதேசத்தில், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறலாம் என்றும் வெற்றி பெற்றபின் ஆட்சியைக் எவ்வாறு கைப்பற்றலாம் என்றும், காங்கிரஸ் கட்சி தற்போது இலிருந்து வியூகம் வகுக்க ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார். உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 100 தொகுதிகளில் 40 சதவிகித இடங்களில் பெண்கள் போட்டியிட வாய்ப்பளிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என்றும் இதை நான் உறுதியாக சொல்கிறேன் என்றும் கூறியுள்ளார்.