அம்பலமானது கமல்ஹாசனின் ரகசிய பேச்சுவார்த்தை!

Photo of author

By Sakthi

திமுக கூட்டணியில் இணைவதற்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி 40 தொகுதிகளை கேட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டணி குறித்து உதயநிதி ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்து பேசி இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகின்றது இதற்கு முன்னரே இரண்டு முறை தொலைபேசி மூலமாக கமலஹாசன் உதயநிதியை அழைத்து பேசி இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகின்றது அந்த சமயத்தில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் கட்சி ஒன்றிணைவது தொடர்பாக இரு தரப்பினரும் பேசியிருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க இருக்கின்ற நிலையிலே, கமல்ஹாசனை தங்களுடைய கூட்டணியில் இணைய வைக்க திமுக முயற்சி செய்வதாக தெரிய வந்திருக்கின்றது இவ்வளவு பேச்சுவார்த்தைக்கு பின்னர், திமுகவுடன் கூட்டணி உண்டா என்று கேள்வி எழுப்பி அதற்கு கூட்டணியைப் பற்றி பேசுவதற்கான நேரம் இதுவல்ல என்று தெரிவித்திருக்கின்றார் கமல்ஹாசன். ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைப்பதற்கு ரெடி என்று கோவில்பட்டியில் நேற்றைய தினம் பேசியிருந்தார் கமலஹாசன் இந்த நிலையிலேயே அவர் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது இப்போது அம்பலமாகியிருக்கிறது.