நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,272 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,272 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .ஆகவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,45,83,360 என்று பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 4,474 நபர்கள் இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து நலமடைந்ததால் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,40,13,999 என பதிவானது. தற்சமயம் 40,750 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நோய் தொற்று காரணமாக 11 பேர் பலியானதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,611 என அதிகரித்திருக்கிறது. நாட்டில் இதுவரை 218.17 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.