ஆணழகனை அடைய 45 வயது கள்ளக்காதலி செய்த செயல்! தேடி கண்டுபிடித்த மனைவி!

0
72
45 year old fake girlfriend's act to reach the man! Discovered in search of a wife!
45 year old fake girlfriend's act to reach the man! Discovered in search of a wife!

ஆணழகனை அடைய 45 வயது கள்ளக்காதலி செய்த செயல்! தேடி கண்டுபிடித்த மனைவி!

தற்போதெல்லாம் எந்த வயதாக இருந்தால் என்ன? நமக்கு சரி என்றால், சரி என்ற எண்ணம் பெரும்பான்மையானவர்களுக்கு இருக்கின்றது. அதன்பின் அவர்கள் பிரிந்து செல்லும் நிலையில், ஆத்திரம் அடைந்து வேறு ஏதேனும் ஒரு முடிவை எடுத்து விடுகின்றனர்.

அதன் காரணமாக அவர்கள் வாழ்கையை வீணடித்துக் கொள்கின்றனர். அப்படி ஒரு விஷயம் கோலார் டவுன் கல் பேட்டை, போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, மகாலட்சுமி லே-அவுட்டில் வசித்து வருபவர் ஜமீர். 25 வயதான இவர் கட்டுக்கோப்பான உடற்கட்டு கொண்டு,  ஆணழகன் போட்டியிலும் பங்கேற்று வந்தார். இந்நிலையில் இவருக்கும் ஷாகியா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 45 வயதான ஷாகியா தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இவ்விருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதன் காரணமாக இரண்டு பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதற்கிடையே அந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இது பற்றி அறிந்த ஷாகியா வேறொரு பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று அவரிடம் கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு தெரியாமல் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அந்த ஆணழகன், சிக்பல்லாபூரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஷாகியா,  ஜமீரை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவருக்கு போன் செய்த, அந்தப் பெண் தான் ஐதராபாத்தில் இருப்பதாகவும், தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எனவே பணத்தை எடுத்துக்கொண்டு ஐதராபாத்திற்கு உடனே வரும் படியும் கூறியுள்ளார். இதனால் உதவும் எண்ணத்தில் பணத்தை எடுத்துக் கொண்டு அந்த நபர் ஹைதராபாத்துக்கு புறப்பட்டு சென்றார்.

ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவர் எங்கோ மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் அவரது மனைவி கல் பேட்டை போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரை எடுத்துக்கொண்டு போலீசார் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். ஜமீர் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டறிய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது ஜமீர் செல்போன் பீதர் அருகே ஒரு கிராமத்தில் இருப்பதாக தெரிந்தது. மேலும் ஷாகியாவிடம் அவர் அத்திகமாக பேசியதும் தெரியவந்தது.

இதனால் ஷாகியாவை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது பேச்சை கேட்காமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால், பீதரை சேர்ந்த கூலிப்படை கும்பல் பணம் கொடுத்து ஜமிரை தீர்த்துக் கட்டியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரை பீதர் அருகே நிடுவஞ்சி கிராமத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு புதைக்கப்பட்ட ஜமீரின் உடல் போலீசார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஷாகியா கொடுத்த தகவலின் பேரில் கூலிப்படையைச் சேர்ந்த ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். எனவே கைதான 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.