கொரோனா தொற்று பரவுதலை இந்த 4T
முறையின் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையை தலைநகராக கொண்ட தாராவியில் 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.இது ஆசியாவிலேயே மிக அதிகமாக மற்றும் குறுகிய பரப்பளவில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக தாராவி சொல்லப்படுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதலில் கூறப்படுவது சமூக இடைவெளிதான் ஆனால் தாராவியில் அதிக மக்கள் நெருக்கம் இருப்பதால் சமூக இடைவெளி என்பது ஒன்று கடினமானதாகும். இதனால் வைரஸ் தொற்று எளிதில் பரவி விட வாய்ப்பு அதிகம் இருக்கின்றன.
கொரோனா தொற்று தாராவில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, முதல் பாசிட்டிவ் கேஸ் உறுதியானது.இது மும்பை மாநகராட்சிக்கும் மகாராஷ்டிரா அரசுக்கும் பெரிய சவாலாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. மேலும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் தொற்று பரவுதளின் எண்ணிக்கை 400 – ஆக அதிகரித்தது.
அடுத்த ஒரே மாதத்தில் 1500க்கும் மேற்பட்ட தொற்றுகளும் 50க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் உறுதிசெய்யப்பட்டது.இது மும்பை மாநகராட்சிக்கும் மகாராஷ்டிர மாநில அரசுக்கும் பெரிய சவாலாக இருந்தது.
உடனடியாக அந்த மாநில அரசு 4T என்ற தடுப்பு நடைமுறையை பின்பற்றியது.
Tracing- தொற்று பாதையை கண்டறிவது,
Testing – பரிசோதனை மேற்கொள்வது Tracking-தொற்று உள்ளவர்களை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து கண்காணிப்பது, Treatment-சிகிச்சை அளிப்பது ஆகிய முறைகள் செயல்படுத்தப்பட்டது.
முதியவர்களுக்கும் ஏற்கனவே நோயுள்ளவர்ளுக்கும் முன்கூட்டியே சோதனை செய்யப்பட்டு அறிகுறி உள்ளவர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டனர். அறிகுறி இல்லாமல் வைரஸ் உறுதியானவர்களுக்கும்,லேசான பாதிப்பு இருப்பவர்களுக்கும் ராஜீவ் காந்தி விளையாட்டு மைதானம் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
மேலும் தாராவியில் வீடு வீடாக சென்று சோதனை செய்யப்பட்டதன் மூலமாக ஆரம்பத்தில் கட்டத்தில் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.இதுவரை அங்கு 2335 பேர்க்கு தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது அதில் 80-க்கும்அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் மேலும் 1734 பேர் வைரஸில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து உள்ளனர் தற்போது 352 பேரும் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மற்ற மாநிலங்களில் மற்ற பெரு நகரங்களில் ஒரு நாளைக்கு ஆயிரம் இரண்டாயிரம் என பாசிட்டிவ் கேசுகள் உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ஆசியாவிலேயே மக்கள் நெருக்கம் கொண்ட தாராவி பகுதியில் தற்போது இந்த 4T முறையால் நேற்று ஒரே ஒரு பாசிட்டிவ் கேஸ் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.அந்தப் பகுதியில் தொற்றினை கட்டுக்குள் கொண்டுவந்து சாதனை புரிந்துள்ளது மகாராஷ்டிர மாநிலம்.