சிக்கிய 5 வங்கிகள்!! இந்திய ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை!!

Photo of author

By Jeevitha

இந்திய ரிசர்வ் வங்கி ஐந்து கூட்டுறவு வங்கிகளுக்கு ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை மீறியதற்காக அபராதம் விதித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி கடன் வழிகாட்டுதல்கள் மற்றும் SAS கட்டமைப்பை மீறியதால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த ஐந்து கூட்டுறவு வங்கிகளில் தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா,பெங்களூருவில் உள்ள வங்கிகள் அடங்கும். அதில் ஸ்ரீ சரண் சௌஹர்தா கூட்டுறவு வங்கி லிமிடெட் என்ற நிறுவனத்தின் மீது வருமானம் அங்கீகாரம் இல்லாமல் கடன் கணக்குகளை தரநிலைகளின் படி செயல்படாத சொத்துக்களாக வகைபடுத்த தவறியதற்கு சுமார் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஸ்ரீ ரங்கனம் கோ-ஆபரேடிவ் அர்பன் வங்கி லிமிடெட் என்ற நிறுவனம் SAF என்பதை புறக்கணித்து அதிக ஆபத்துள்ள கடன்களை வழங்க அனுமதித்ததற்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதே போல் நிலம்பூர் கூட்டுறவு அர்பன் வங்கி லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு ரூ.50,000 மற்றும் மானவி பட்டானா சௌஹர்தா சககாரி வங்கி நியாமிதா நிறுவனம் SBI-யை விட அதிக வட்டி கடன்கள் வழங்கியதற்கும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் ஸ்ரீ மஹாபலேஷ்வர் கூட்டுறவு வங்கி லிமிடெட் நிறுவனம் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு பல கடன்களை மீண்டும் மீண்டும் வழங்கி விதி மீறியதால் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் விதிக்க முக்கிய காரணம் வங்கிகளிடையே நிதி அமைப்பை பராமரிக்கவும் மற்றும் ஒழுங்கு முறையை சரி செய்யவும் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் இனி எந்த வங்கியும் தவறு செய்யாது என கூறப்படுகிறது.