காதலியின் மாஸ்டர் பிளான்!! காதலனை கொல்ல சூப்பில் விஷம்!! முடிவில் 5 பேர் உயிரிழந்த சோகம்!!

Photo of author

By Sakthi

காதலனை பழி தீர்க்க காதலி எடுத்த விபரீத முடிவால் 5 நபர்கள் உயிரிழந்த சோகம்.

இப்போதெல்லாம், காதல் திருமணம் செய்பவர்கள் அதிக அளவில் விவாகரத்து செய்து வருகிறார்கள். காதலில் இருப்பவர்கள் குடும்ப வாழ்க்கை பற்றிய புரிதல் இருப்பதில்லை. காதலன் காதலியை கொலை செய்தான் என திடுக்கிடும் செய்திகள் வந்த வண்ணம் உன்னது என்பது வருத்தமளிக்கிறது .

அந்த வகையில் கீழே குறிப்பிட்டுள்ள சம்பவம் இருக்கிறது.
காதலனை பழிவாங்குவதற்காக காதலி மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்து இருக்கிறார். விஷம் கலந்த சூப்பை காதலன் அவனது நண்பர்களுடன் குடித்து இருக்கிறார்.உடல் நலம் பாதிக்கப்பட்டு காதலன் உட்பட அவனது ஐந்து நண்பர்களும் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் உடல்நிலை மோசமான நிலைக்கு சென்று சிகிச்சை பலன் இன்றி உயிர்இழந்து இருக்கிறார்கள். பிரேத பரிசோதனையில் உணவு ஒவ்வாமையால் உயிர் இழந்து இருக்கிறார்கள் என்று முடிவு கொடுக்கப்பட்டது. மேலும் காதலன் உறவினர்கள் காதலியின் மீது சந்தேகப்பட்டு போலீசாரில் தெரிவித்து இருக்கிறார்கள்.

போலீசாரின் தீவிர விசாரணைக்கு காதலி, காதலனை கொல்ல சூப்பில் விஷம் கலந்த உண்மை வெளியானது. அப்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச் சம்பவம் நைஜீரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.