5 மாடி கட்டிடம் விழுந்து விபத்து:? 200 பேரின் நிலை என்ன?

Photo of author

By Pavithra

5 மாடி கட்டிடம் விழுந்து விபத்து:? 200 பேரின் நிலை என்ன?

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்கட் மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணியளவில்,
5 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த இடிந்து விழுந்த கட்டிடத்திற்குள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தேசிய மீட்புக்குழு படையினர் மற்றும் மாநில மீட்பு குழு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இரவு வரை 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மீதமுள்ளவர்களை விரைவில் மீட்டெடுக்கும் பணியானது நடந்து வருவதாக கூறப்படுகிறது.இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

https://twitter.com/enavabharat/status/1297904282008563713?s=08