சமையலறையில் வைக்க கூடாத 5 பொருட்கள்..!! மகாலட்சுமியின் வரவை தடுத்து விடும்..!!

Photo of author

By Janani

சமையலறையில் வைக்க கூடாத 5 பொருட்கள்..!! மகாலட்சுமியின் வரவை தடுத்து விடும்..!!

Janani

ஒரு வீட்டின் சமையலறை என்பது பூஜை அறைக்கு நிகரான ஒரு அறையாகும். பூஜை அறையில் எவ்வாறு தெய்வங்கள் குடிகொண்டு இருக்கிறதோ, அதேபோன்றுதான் சமையலறையிலும் தெய்வங்கள் குடி கொண்டு இருக்கும். அத்தகைய சமையலறையை எப்பொழுதும் சுத்தமாகவும், வாசனையுடனும் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகள் தான் வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சத்தை குறைத்து பணவரவை தடுத்து விடுகிறது. இதனால் தான் குடும்பத்தில் வறுமை, கடன் பிரச்சனை, பண பற்றாக்குறை, குடும்பத்தில் நிம்மதியின்மை இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே நாம் செய்யக்கூடாத தவறுகளை தெரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்வது நல்லது.

பூஜையறையில் எப்படி ஒரு சில பொருட்களை வைக்கக் கூடாது என்று சாஸ்திரம் உள்ளதோ, அதேபோன்றுதான் வீட்டின் சமையலறையிலும் ஒரு சில பொருட்களை கட்டாயம் வைத்திருக்கக் கூடாது. இந்த பொருட்கள் உங்களது சமையலறையில் இருந்தால் தெய்வங்களின் வரவை அது தடுத்துவிடும். மேலும் லட்சுமி தேவியும் உங்களது வீட்டில் தங்க மாட்டார்.

ஏனென்றால் லட்சுமி தேவிக்கு பிடிக்காத ஒரு சில பொருட்கள் உள்ளன. அதேபோன்று லட்சுமிதேவி இருக்கக்கூடிய இடம் எப்பொழுதும் சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்க வேண்டும். எனவே லட்சுமி தேவிக்கு பிடிக்காத இந்த பொருட்களை உங்களது சமையலறையில் மறந்தும் வைத்து விடாதீர்கள். அது எந்தெந்த பொருட்கள் என்பதை இந்த பதிவில் காண்போம்.

1. சமையலறை என்பது மகாலட்சுமியும், அன்னபூரணியும் வாசம் செய்யக்கூடிய இடம். எனவே அந்த இடத்தில் உடைந்த பாத்திரங்களையும், துருப்பிடித்த இரும்பு பொருட்களையும் வைத்திருக்கக் கூடாது. இது போன்ற பொருட்களை சமையலறையில் வைத்திருந்தால், அது குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகளை ஏற்படுத்தி விடும்.

2. சமையலறையில் சமைத்த கழிவு பொருட்களை குவித்து வைப்பது, குப்பை தொட்டிகளை வைப்பது கூடாது. அவ்வபோது சமைத்த கழிவுகளை வீட்டிற்கு வெளியே குப்பையில் போட்டு விட வேண்டும். குப்பை கழிவுகளை போடுவதற்கு என சமையலறையில் குப்பை தொட்டிகளை வைக்க கூடாது. இதுபோன்று குப்பைகளை வைத்திருந்தால் துர்நாற்றம் வீசும். இதனால் மகாலட்சுமி அங்கு தங்க மாட்டார்.

3. அரிசியை அளந்து போடுவதற்கு பிளாஸ்டிக் டம்ளரயோ, எவர்சில்வர் டம்ளரயோ பயன்படுத்தக் கூடாது. சமையல் அறையில் எப்பொழுதும் அரிசி அளக்கும் படி இருக்க வேண்டும். அதில் தான் அரிசியை அளக்க வேண்டும். இதை தவிர்த்து வேறு பொருட்களால் அரிசியை அளந்து போட்டால், வீட்டில் செல்வ செழிப்பு குறைந்துவிடும்.

4. சமையலறையில் துடைப்பம் வைக்க கூடாது. இது வீட்டில் தீராத வறுமையை ஏற்படுத்தி விடும். எனவே மறந்தும் சமையலறையில் துடைப்பத்தை வைத்து விடாதீர்கள்.

5. சமையலறையில் மருந்து மாத்திரைகளை வைக்கக் கூடாது. அது எதிர்மறை ஆற்றல்களையும், எதிர்மறை எண்ணங்களையும் உருவாக்கிவிடும். இதனால் நோய் உங்களை விட்டு நீங்காது. எனவே மருந்து மாத்திரைகளை சமையலறையில் வைத்து பயன்படுத்தாதீர்கள்.