ADMK BJP: பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி அடுத்ததாக தமிழக சட்டசபை தேர்தலில் தனது கண்ணோட்டத்தை திருப்பியுள்ளது. இந்த முறை தமிழக அரசியலில், புதிய புதிய திருப்பங்கள் நிகழும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கு ஏற்றார் போல சில சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு, அதன் தோல்விக்கு காரணமாகும் என்று பலரும் கூறி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி வருகின்றனர்.
முதலில் ஓபிஎஸ் டெல்லி சென்ற நிலையில், இவருக்கு பின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்றார். இவர்களை தொடர்ந்து தற்போதைய மாநில தலைவர் நயினாரும் டெல்லி சென்று நிர்மலா சீதாராமன் மற்றும் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இவ்வாறு தலைவர்கள் அனைவரும் அடுத்தடுத்து டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவரின் பேச்சுவார்த்தை குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
பாஜக ஆட்சி பங்கை தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அதில் அண்ணாமலை இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை வகிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அவர்கள் ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை முதல்வர் பதவியை நோக்கி தான் முன் வைக்கிறார்கள் என்று பலரும் கூறுகின்றனர். ஆட்சியில் பங்கு என்ற மரபே இல்லையென்று கூறி வரும் இபிஎஸ் இதனை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.