பணியின் போது இறந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதி! – மு.க.ஸ்டாலின்!

0
167
50 lakh fund for the family of a regional traffic inspector who died while on duty! - MK Stalin!
50 lakh fund for the family of a regional traffic inspector who died while on duty! - MK Stalin!

பணியின் போது இறந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதி! – மு.க.ஸ்டாலின்!

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கனகராஜ். இவர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார். 57 வயதான இவர் இன்று காலை 9 மணி அளவில் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள வேக்கங்கல்பட்டி மேம்பாலத்தின் அடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்த அவர் முயற்சி செய்தார். ஆனால் அங்கே நிறுத்தாமல் அந்த வண்டி அவர் மீது வேகமாக மோதி விட்டு சென்றுவிட்டது. அந்த விபத்தில் மிகவும் படுகாயமடைந்த கனகராஜ், சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனாலும் காலை பத்து முப்பது மணி அளவில் அவருக்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டார். இது குறித்து தாந்தோனிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் கரூரில் சாலை விபத்தில் உயிரிழந்த அவரது குடும்பத்திற்கு 50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Previous articleமக்கள் நீதி மய்யம் தலைவருக்கு ஏற்பட்ட தொற்று! மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்!
Next articleநான் நன்றாக பாதுகாப்பாக இருக்கிறேன்! கேள்விகளுக்கு பதிலாக வீடியோவை வெளியிட்ட சீன அரசு!