வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு 50 இலட்சம்! அரசு அதிரடி!

0
156
50 lakhs for a soldier who died a heroic death! Government Action!
50 lakhs for a soldier who died a heroic death! Government Action!

வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு 50 இலட்சம்! அரசு அதிரடி!

ராணுவ வீரர்களின் பங்கெடுப்பு நம்மால் ஈடு கொடுக்க முடியாதது. அவர்கள் வெயில் மற்றும் மழையிலும், தொடர்ந்து நமக்காக நாட்டு எல்லையில், போராடி வருகின்றனர். மேலும் அவர்கள் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவும் எப்போதும் தயாராகவே இருக்கின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் ராஜவுரி மாவட்டத்தில், சுந்தர் பானி பகுதியில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும்  பயங்கரவாதிகள் தாக்கியதன் காரணமாக இந்திய ராணுவ வீரர் ஸ்ரீஜித் மற்றும் குண்டூரை சேர்ந்த ஜஸ்வந்த் ரெட்டி ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். ஜஸ்வந்த் 23 வயதானவர்.

ஆந்திர மாநிலத்தில், குண்டூர் மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த, ஜஸ்வந்த் ரெட்டி கடந்த 2014 ஆம் ஆண்டில் மதராஸ் ரெஜிமென்ட் இராணுவத்தில் சேர்ந்தார். முதலில் நீலகிரியிலும் பின்னர் காஷ்மீரிலும் பணியில் அமர்த்தப்பட்டார். அடுத்தமாதம் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளார் ஜஸ்வந்த்.

இதனைத் தொடர்ந்து கடப்பாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, வீரமரணமடைந்த ஜெஸ்வந்த்தின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் ஜஸ்வந்த் இளம் வயதில் நாட்டுக்காக உயிர் துறந்துள்ளார். இவரது தியாகம் வாழ்நாளில் மறக்கமுடியாது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனவும் கூறினார்.

Previous articleலைக் & ஷேர் செய்வதினால் சம்பாதிக்கலாம்! நூதன மோசடி!
Next articleமோடியின் அடுத்த திட்டம் இது தான்! விரைவில் அமலுக்கு வருமா?