50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணை! உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியின் போது வெளியாகும்! ஜெய்ஷா தகவல்!

Photo of author

By Sakthi

50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணை! உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியின் போது வெளியாகும்! ஜெய்ஷா தகவல்!
இந்த வருடம் இந்தியாவில் நடக்கவிருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கான அட்டவணை அடுத்த மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது வெளியிடப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் அஹமதாபாத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தான் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா அவர்கள் கூறியுள்ளார்.
அந்த பொதுக்குழு கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா அவர்கள் “இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐசிசியின் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7ம் தேதி முதல் ஜூன் 11ம் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில்  நடைபெறவுள்ளது.
இந்த போட்டியின் போது இந்தியாவில் நடைபெறும் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அட்டவணை வெளியிடப்படும். ஆசிய கோப்பை போட்டி குறித்து ஐபிஎல் இறுதிப் போட்டியை காண வரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
உலகக் கோப்பை போட்டி மற்றும் பெண்கள் பிரீமியர்.லீக் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை கவனிக்க  சிறப்பு கமிட்டி அடுத்த வாரம் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் ” ஜூலை மாதம் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஜூலை மாதம் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 3 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. 2வது பெண்கள் பிரீமியர் லீக் தொடர் அடுத்த ஆண்டு மாய்ச் மாதத்தில் நடத்த முடிவு செய்துள்ளோம். உலகக் கோப்பை தொடருக்கு முன்னாள் இந்தியா ஆப்கானிஸ்தான் அணி பங்குபெறும் குறுகிய வடிவிலான போட்டி நடத்தப்படும்” என்று கூறினார்.