ரேஷன் அட்டைதார்களுக்கு ஜாக்பாட்!! 5000 ரூபாய் வெள்ளநிவாரணம்-முதல்வர் அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

Puducherry State:வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5000 நிதி உதவி வழங்கப்படும் புதுவை முதல்வர் ரங்க சாமி அறிவிப்பு.

ஃபெஞ்சல் புயலால் புதுவை மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.20 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகன மழை பெய்து இருக்கிறது.புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரப்பி உபரி நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து இருக்கிறது.எனவே வெள்ள நிவாரணத்தை அறிவித்து இருக்கிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.

அவர் வெளியிட்டு இருக்கின்ற அறிவிப்பில், புதுவை மாநிலம் முழுவது வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து இருக்கிறார்கள். எதிர்பார்த்த அளவை விட அதிகமாக ஃபெஞ்சல் புயலால் காரணமாக மழை பெய்து இருக்கிறது. எனவே வெள்ள நிவாரணமாக ரேஷன்கார்டு வைத்து இருப்பவர் ரூ.5,000 வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

மேலும், புயலால் உயிர் இழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்க உள்ளதாகவும், பயிர் சேதத்திற்கு ஒரு ஏக்கர்க்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறார். மேலும் கால்நடை உயிரிழப்புகளுக்கு நிவாரணம் அறிவித்து இருக்கிறார். அதாவது, ஒரு மாட்டிற்கு ரூ.40,000ஆகவும், இளம் கன்றுக்கு ரூ.30,000 ஆக நிவாரணம் அறிவித்து இருக்கிறார்.

மற்ற புயல்கள் போல் இல்லாமல் ஃபெஞ்சல் புயல் தொடர்ந்து ஒரே இடத்தில் நகராமல் இருந்தால் அதிக அளவில் மழை பெயித்து இருக்கிறது. குறிப்பாக வடதமிழகத்தில் வெள்ள பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டு இருக்கிறது.