மணிப்பூரில்  நடப்பது என்ன? குவிக்கப்படும் பாதுகாப்பு படையினர்  உச்சக்கட்ட பதற்றம்!!

Photo of author

By Sakthi

Manipur:மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையை கட்டுப்படுத்த 5000  துணை இராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளார்கள்.

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மைத்தேயி  இன மக்களிடையே போராட்டம் கடந்த ஒரு ஆண்டு காலமாக நடந்து வருகிறது. குக்கி இன மக்கள் மணிப்பூர் மாநில மலைப்பகுதியில் வாழும் பழங்குடி இனத்தவர்கள் ஆவார்கள், இவர்களுக்கும் அம்மாநிலத்தில் நகர் தொகுதியில் பெரும்பான்மையாக வாழக்கூடிய மக்கள் மைத்தேயி  இன மக்கள்.

இவ்விரு இன மக்களிடையே வேலைவாய்ப்பு முதலியவற்றில் இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் ஏற்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான குக்கி இன மக்கள் மீது போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டவர்கள். மேலும்  அவர்கள் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தார்கள். இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த போராட்டம் பேச்சுவார்த்தை மற்றும் ராணுவ துப்பாக்கி சூட்டின்   மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தான் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் முதலமைச்சர், உட்பட 13 எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

மேலும் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. எனவே இந்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா 5000 ராணுவ வீரர்கள் கொண்ட  துணை ராணுவப் படையினரை அனுப்பி இருக்கிறார்கள். இதனால் அசாம் மாநில எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளது.

மேலும்  மணிப்பூர் மாநிலத்தில் போராட்டத்தை கட்டுப்படுத்த  அமித்ஷா தலைமையில் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.