மாநிலம் முழுவதும் 56 துணை ஆட்சியர்கள் அதிரடி பணியிட மாற்றம்!

Photo of author

By Sakthi

தமிழகம் முழுவதும் 56 துணை ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு குடிமைப் பணியின் கீழ் பல்வேறு துறைகளில் துணை ஆணையர் அந்தஸ்தில் பணியாற்றி வரக்கூடிய 56 நபர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆதிதிராவிடர் பழங்குடியினர் அலுவலர், தமிழ்நாடு மாநில வாணிப கழகம், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையின் கீழ் இயங்கக்கூடிய துணை ஆணையர் அந்தஸ்தில் இருக்கும் வெவ்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் 56 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியராக சோ.பல்தறை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் கலால் துறை உதவி ஆணையராக ராம்குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோல பல்வேறு நிலையில் உள்ள 56 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.