இந்தியாவில் மேலும் 5,910 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு!

Photo of author

By Sakthi

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பரவல் காரணமாக, மேலும் 5,910 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறையமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,910 பேர் நோய் தொற்று காரணமாக, பாதிப்படைந்திருக்கிறார்கள். இதனால் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,44,62.445 என அதிகரித்திருக்கிறது.

சென்ற 24 மணி நேரத்தில் 8,414 பேர் இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்ததால் இந்த வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 4,38,80,464 என அதிகரித்திருக்கிறது இந்த நிலையில், தற்போது 53,974 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நோய் தொற்று பாதிப்பு காரணமாக, 9 பேர் மரணமடைந்திருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,007 என அதிகரித்திருக்கிறது.

இதுவரையில் நாட்டில் 213.52 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது எனவும், அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.