6 அடி நீளம் உடைய தோசை… முழுவதுமாக சாப்பிட்டால் 11000 ரூபாய் பரிசு… இணையத்தில் வைரலாகும் ஹோட்டலின் அறிவிப்பு… 

0
136

 

6 அடி நீளம் உடைய தோசை… முழுவதுமாக சாப்பிட்டால் 11000 ரூபாய் பரிசு… இணையத்தில் வைரலாகும் ஹோட்டலின் அறிவிப்பு…

 

6 அடி நீளம் கொண்ட தோசையை முழுவதுமாக சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு 11000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று டெல்லியில் ஹோட்டல் ஒன்று அறிவிப்பு வெளியிட்டாள்ளது.

 

டெல்லி மாநிலத்தில் கனாட் பிளேஸ் என்ற பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து சுமார் 6 அடி நீளம் கொண்ட தோசையை தனியாக அதாவது ஒரே ஒரு நபர் மட்டும் முழுவதுமாக சாப்பிட்டு முடிக்க வேண்டும். அவ்வாறு தனியாக அந்த 6 அடி தோசையை சாப்பிட்டு முடித்தால் அந்த நபருக்கு 11000 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று கூறி சமூக வலைதளங்களில் அறிவிப்பை வெளியிட்டது. இந்த 6 அடி நீள தோசை சேலஞ்சுக்கான அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

 

இதையடுத்து இந்த அறிவிப்பு வீடியோ வெளியானதில் இருந்து சிறிது நேரத்திலேயே 50 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. மேலும் 3.82 லட்சம் விருப்பங்களை இந்த வீடியோ பெற்று இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகின்றது. இந்த வீடியோவை பார்க்கும் பயனாளர்கள் சவால் குறித்த சந்தேகங்களை கேட்டு வருகின்றனர்.

 

அந்த வீடியோவை பார்த்த நபர் ஒருவர் ‘ தோசையை சாப்படுவதற்கு நேரம் நிர்ணயிக்கப்படவில்லை என்றால் அந்த சவாலில் நான் வென்று விடுவேன்’ என்று கூறியுள்ளார். மற்றொரு நபர் ‘உங்களுடைய பணத்தை வைத்திருங்கள். நான் அதை இலவசமாக சாப்பிடுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

 

அதே போல மற்றொரு நபர் ‘சமையல் அறையில் என் அம்மாவின் அருகில் இருக்கும் பாத்திரத்தில் உள்ள 20 முதல் 25 தோசைகளை சாப்பிடும் நான் இந்த 6 அடி தோசையை எளிமையாக சாப்பிட்டு விடுவேன்’ என்று கூறியுள்ளார். தற்போது இணையத்தில் இந்த 6 அடி தோசை சேலஞ்ச் வைரல் ஆகி வருகின்றது. இதற்கு முன்னர் மிகப் பெரிய சமோசாவை முழுவதுமாக சாப்பிடும் நபர் ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு தொகை பரிசாக வழங்கப்படும் என்ற சவால் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

Previous articleவந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துட்டேனு சொல்லு… மீண்டும் ஸ்மார்ட் போன் விற்பனையில் களமிறங்கிய மோட்டோ நிறுவனம்!!
Next articleமுதல் முறையாக 53.67 லட்சம் பேர் வருமான வரி தாக்கல்!! வருமான வரித்துறை வெளியிட்ட தகவல்!!