ADMK BJP: பீகாரில் வெற்றி பெற்ற பாஜக, இதனை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தலை நோக்கி திரும்பியுள்ளது. இதற்காக ஒரு வருடத்திற்கு முன்பு அதிமுக உடன் கூட்டணி அமைத்து, பாஜக மாநில தலைவர் நயினார் தலைமையில் சுற்றுப்பயணத்தையும் ஆரம்பித்து விட்டது. இந்த சுற்றுப்பயணம் முடிவடையும் கட்டத்தில் இருப்பதால், அடுத்ததாக இபிஎஸ்யிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச ஆரம்பித்துள்ளது. மேலும் ஆட்சி பங்கையும் வலியுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் ஆட்சி பங்கு என்ற மரபே இல்லையென்பதால் இபிஎஸ் இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.
இந்நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பலரும், டெல்லி சென்று அமிதாஷ்வை சந்தித்து வருகின்றனர். நயினாரும் டெல்லி செல்வதற்கு முன்பு இபிஎஸ்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இவ்வாறு பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், டெல்லி மேலிடம், அதிமுகவிடம் 100 தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அந்த 100 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள 60 தொகுதிகள் பாஜக வசமும், மீதமிருக்கும் 40 தொகுதிகள் டிடிவி தினகரன், ஓபிஎஸ் வசம் ஒப்படைக்க போவதாக பாஜக முடிவு செய்துள்ளதாக பலரும் கூறுகின்றனர்.
மொத்தமே 243 தொகுதிகள் மட்டுமே இருக்கும் பட்சத்தில் பாஜக 100 தொகுதிகள் கேட்க முடிவு செய்திருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது இப்படியே தொடர்ந்தால் அடுத்ததாக அதிமுகவில் இணையும் கட்சிகளுக்கு தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் ஏற்படும். மேலும் பாஜகவிற்கு தமிழகத்தில் அதிகளவு செல்வாக்கு இல்லாத போது, இவ்வளவு தொகுதிகளை கேட்பது அதிமுகவின் உள்வட்டாரத்தில் சலசலப்பு நிலவி வருகிறது. இது அதிமுகவின் தோல்விக்கு வழிவகுக்கும் என்று இரண்டாம் கட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருவதாகவும் சிலர் கூறுகின்றனர்.