63 பேரை பேருந்துகளுடன் அடித்துச் சென்ற ஆற்று வெள்ளம்!! நேபாளம் நாட்டில் பெரும் அதிர்ச்சி!!
நேபாளம் நாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவு காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் ஆற்றினுள் கவிழ்ந்து பேருந்தில் பயணம் செய்த 63 பேர் ஆற்றுடன் அடித்து செல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
நேபாளம் நாட்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் ஆங்காங்கே விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றது. இதையடுத்து நேபாளம் நாட்டில் தலைநகர் காத்மண்டுவில் நடந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் திரிசுலி ஆறு ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த ஆற்றின் மேல் நெடுஞ்சாலை இருக்கின்றது. இந்த நெடுஞ்சாலையில் இன்று(ஜூலை12) காலை இரண்டு பேருந்துகள் சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது கனமழை பெய்து கொண்டிருந்ததால் திரிசுலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டதால் சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகளும் ஆற்றோடு அடித்து செல்லப்பட்டது.
இரண்டு பேருந்துகளில் சேர்த்து சுமார் 63 பயணிகள் பயணம் செய்தனர். அந்த 63 பேரும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். மூன்று பேர் மட்டும் குதித்து உயிர் தப்பிய நிலையில் 63 பேரின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 63 பேரை தேடும் பணியை மீட்புக்குழு தீவிரமாக செய்து வருகின்றது. 63 பேர் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட இந்த சம்பவம் நேபாளம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.