canada:7 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் கனடா நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கனடாவில் 50 லட்சம் வெளிநாட்டு மக்கள் தற்காலிகமாக வசித்து வருகிறார்கள்.இதில் பல லட்ச மாணவர்கள் படிப்பிற்கான தங்கி இருக்கிறார்கள். அவர்களின் வேலை மற்றும் படிப்பிற்கான விசா பர்மிட் அடுத்த ஆண்டு முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும் விசா பர்மிட் புதுப்பிப்பதற்காக கனடா அரசு அனுமதி வழங்காது என தெரிவித்துள்ளது.
இதனால் பல லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது தாய் நாட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முயற்ச்சிகளை அந்த நாடு எடுத்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இந்திய மாணவர்கள் அந்த நாட்டில் தங்கி படித்து வருவது மட்டுமல்லாமல் வேலையும் பார்த்து வருகிறார்கள்.
அவர்களின் விசா பர்மிட் ஒரே கால கட்டத்தில் காலாவதி ஆவதனால் சுமார் 7 லட்சம் இந்திய மாணவர்கள் கனடா நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் கேட்டு கனடா நாட்டின் ஆளும் அரசிடம் கேள்வி எழுப்பி இருக்கிறது எதிர்க்கட்சிகள். இது தொடர்பாக அரசு அதிகாரி மில்லர் விளக்கம் கூறி இருக்கிறார். அதில், விசா பர்மிட் காலாவதி ஆகும் நபர்களுக்கு புதிய பர்மிட் வழங்க ஆய்வு நடைபெறும் என்று தெரிவித்து இருந்தார்.
கடந்த ஆண்டு 2023 மே மாத நிலவரப்படி சுமார் 10 லட்சம் மாணவர்கள் கனடா நாட்டை படித்து வருகிறார்கள். மேலும் 3.96 லட்சம் பேர் போஸ்ட் ஒர்க் விசா பெற்று படித்து வருவதாக அந்த நாட்டு அரசாங்கம் நடத்திய கணக்கெடுப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் இந்தியா கனடா இடையேயான பிரச்சனை மேலும் அதிகரிக்கும்.