இதை முன்பே செய்து இருந்தால் 700 உயிர்களை காத்து இருக்கலாம்! – அரவிந்த் கெஜ்ரிவால்!
குருநானக் ஜெயந்தி ஒட்டி பிரதமர் மோடி இன்று காலை நாட்டு மக்களுக்கு சிறப்பு உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அனைத்து சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும், விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தியையும் அறிவித்தார். இதற்கான நடவடிக்கைகளை அடுத்த மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத் தொடரின் மூலம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
பிரதமர் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்ததற்கு விவசாய சங்கங்கள் தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் கடந்த ஒரு வருடமாகவே விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு விவசாயிகளுக்கு டெல்லியின் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறும்போது நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகளின் போராட்டம் தற்போது பலன் தந்துள்ளது. இந்த மூன்று வேளாண் சட்டங்களை முன்பே ரத்து செய்திருந்தால், 700 விவசாயிகளின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்.
ஆனாலும் இது ஒரு மிகப்பெரிய விஷயம் தான். விவசாயிகள் போராட்டம் மூலம் மூன்று வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெறுவதும் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக இதுவாகத்தான் இருக்கும் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.