தமிழக அரசில் புதிதாக 75 ஆயிரம் வேலைவாய்ப்பு பணியிடங்கள்!! இளைஞர்களே இனி வரப்போகும் 6 மாத காலத்தை தவற விடாதீர்கள்!!
தமிழ்நாட்டில் சட்ட சபை ஜூன் மாதம் 20 ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.காலை மற்றும் மாலை என வேளைகளில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது.இந்த நிலையில் அரசு பணியிடங்கள் பற்றிய அறிவிப்பினை தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் விதி 110 கீழ் வெளியிட்டார்.
அதில் அவர் புதிதாக 75 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.இது அரசு வேலையை நம்பி இருக்கும் தமிழக இளைஞர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அந்த வகையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் ,ஆசிரியர் தேர்வு வாரியம்,மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் என அனைத்து துறைகளிலும் மொத்தமாக 46,584 காலிப் பணியிடங்கள் உள்ளன.
மேலும் இந்த வேலைவாய்ப்பு பல்வேறு துறைகள் வரும் மூலம் 18 மாதத்திற்குள் நிரப்படும் என உறுதி அளித்துள்ளார்.அத்தோடு சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகத் துறை, குடிநீர் வழங்கல் ஆகிய துறைகளில் 30,219 காலியிடங்கள் உள்ளன. இவை அனைத்தும் 2026 ஜனவரிக்கு முன் நிரப்பப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.அடுத்த தேர்தலை பற்றி சிந்திக்காமல் அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கும் அரசுதான் திராவிட மாடல் அரசு என்றும் முதலமைச்சர் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் தமிழக அரசால் தொடங்கப்பட நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது.இத்திட்டத்தை இனி வரும் காலங்களில் இளைஞர்கள் பயன்படுத்தி அரசு வேலையை எளிதாக பெறலாம்.