நாட்டின் 75வது குடியரசு தின விழா !9வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

Photo of author

By Sakthi

நாட்டின் 75வது குடியரசு தின விழா !9வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

Sakthi

இந்தியா கடந்த 1947 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் பிரிட்டிஷ் ஆதிகத்திலிருந்து விடுதலையடைந்தது.இந்த நிலையில், இன்றுடன் இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலயடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

இந்த 75 ஆவது சுதந்திர தினத்தை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி சற்றேற குறைய 5 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்து விட்டார். மேலும் இந்த வருடம் காந்தியடிகள் பிறந்த நாளும் மிக விமர்சையாக கொண்டாடப்படும் எனவும், தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார்.

நாட்டின் 75வது சுதந்திர தினம் சுதந்திர திருநாள் அமுத திருவிழாவாக நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு கடந்த 13ஆம் தேதி முதல் நாட்டு மக்கள் தங்களுடைய வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைத்து தங்களுடைய நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று காலை மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்கோட்டுக்கு சென்று அங்கே பிறந்த நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அங்கிருந்து 7.14 மணியளவில் புறப்பட்ட நரேந்திரமோடி சரியாக 7.18 மணியளவில் செங்கோட்டை வந்தடைந்தார். அங்கே முப்படை வீரர்கள், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் மற்றும் உயரதிகாரிகள் பிரதமரை வரவேற்றினர்.

இதனையடுத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நாட்டின் பிரதமராக 9து முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை பிரதமர் நரேந்திரமோடி ஏற்றி வைத்தார்.

சுமார் 10,000 பேர் பங்கேற்ற இந்த விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் 10,000க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அதோடு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை செய்திருந்ததால் செங்கோட்டையிலிருக்கின்ற கடைகளுக்கு சீல் வைத்து அதோடு 400 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள். மேலும் செங்கோட்டையை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ட்ரோன் உள்ளிட்டவை வானில் பறக்கவும், தடை விதிக்கப்பட்டது.