செல்போனில் படம் பார்த்த மகனை கண்டித்த தாய்! விபரீத முடிவெடுத்த மகன்!

Photo of author

By Sakthi

செல்போனில் படம் பார்த்த மகனை கண்டித்த தாய்! விபரீத முடிவெடுத்த மகன்!

Sakthi

Updated on:

செங்குன்றம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் அமுதவல்லி கணவரை இழந்தவர் செங்குன்றத்தில் இருக்கின்ற இவர் காய்கறி கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் லோகேஸ்வரன் இவர் சென்னை சாலிகிராமத்தில் இருக்கின்ற உறவினர் வீட்டில் தங்கி அங்கே இருக்கின்ற பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். தற்சமயம் பள்ளி விடுமுறை என்ற காரணத்தால், தன்னுடைய வீட்டிற்கு வந்து இருந்ததாக சொல்லப்படுகிறது.

12 வயது சிறுவனான அவர் நேற்று காலை வீட்டில் கைபேசியில் படம் பார்த்துக் கொண்டிருந்தார். இதனை அவருடைய தாயார் அமுதவல்லி கண்டித்திருக்கிறார். அதன்பிறகு அவர் வேலைக்கு சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தன்னுடைய தாய் கண்டித்ததால் விரக்தியடைந்த அவர் வீட்டில் நைலான் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த அவருடைய மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடர்பாக செங்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இந்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதோடு மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.