TN Government: நம் தமிழக அரசு சிறந்த கலைஞர்களுக்கு சிற்பக்கலை பிரிவிலும், மூத்த மற்றும் இளம் கலைஞர்கள் என 50 பேருக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
தமிழக அரசு மக்கள் நலன் கருதி பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த நிலையில் திரைக்கலைஞர்கள், ஓவியக்கலைஞர்கள், நாடகக்கலைஞர்கள் என அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஒரு சிறந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதற்கு மாநில அளவிலான ஓவிய-சிற்ப கலை காட்சி நடத்தி, அதில் ஓவியத்தில் சிறந்த படைப்புகளை வெளிக்காட்டும் கலைஞர்களுக்கு 20,000முதல் 10,000 வரை பரிசு தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
அதில் ஓவியக்கலை பிரிவில் 36 வயதுக்கு மேற்பட்ட 15 மூத்த கலைஞர்களுக்கு ரூ.20,000 மற்றும் 35 வயதுக்கு உட்பட்ட 10 இளம் கலைஞர்களுக்கு ரூ.10,000 எனவும் வழங்கப்படவுள்ளது. 2024-2025 ஆம் நிதியாண்டில் நடத்தப்படும் போட்டிகளுக்கு www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிற்பம் உருவாக்குதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி-1 ஆம் தேதிக்கு மேல் தொடங்கப்பட்டு இருக்க வேண்டும்.
மேலும் இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் நவம்பர்-30 ஆம் தேதிக்குள் கலை பண்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 002என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். மேலும் தகவல்களுக்கு 044-28193195, 044-28192152 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.