Viduthalai-2: விடுதலை -2 திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் கடைசி நிமிடத்தில் படத்தின் 8 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கிறது.
2022 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “துணைவன்” நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் விடுதலை -1. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் தொடக்கம் விடுதலை முதல் பாகம் படத்தின் இறுதியில் காட்சிகள் அமைக்கப் பெற்று இருக்கும். எனவே வெற்றி மாறன் விடுதலை 2 பாகத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியானது.
அந்த டிரைலர் காட்சிகளில் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதி கதாபாத்திரம் பேசிய ‘வன்முறை எங்க மொழி இல்லை. ஆனா எங்களுக்கு அந்த மொழியை பேசத் தெரியும்’ மற்றும் ‘தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர்கள் மட்டும் தான் உருவாக்குவார்… அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது..’ என்ற அரசியல் வசனங்கள் பேசு பொருளாக அமைந்த.
இந்த நிலையில் நாளை விடுதலை இரண்டாக பாகம் திரைக்கு வர உள்ள நிலையில் வெற்றி மாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் படத்தின் 8 நிமிடக் காட்சிகளை “கட்” செய்யப்பட்டு இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார். திரைப்பட தணிக்கை குழு தற்போது படத்தில் இடம் பெற்று இருக்கும் அழுத்தமான அரசியல் வசன காட்சிகளை நீக்க முடிவு செய்து இருக்கிறது.
அதன்படி சாதியைக் குறிக்கும் சொற்கள், அரசியல் கட்சிகளைக் குறிக்கும் பெயர்களை நீக்க இருக்கலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படம் மொத்தம் 2 மணி நேரம் 52 நிமிடங்களாக இருக்கிறது. இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிக அளவில் இடம் பெற்றிருப்பதால் “A” தர சான்று வழங்கி இருக்கிறது.