இந்தாண்டுக்குள் மேலும் 8 பேருடைய மூளையில் சிப் பொருத்தப்படும்! எலாம் மஸ்க் அறிவிப்பு!

Photo of author

By Sakthi

இந்தாண்டுக்குள் மேலும் 8 பேருடைய மூளையில் சிப் பொருத்தப்படும்! எலாம் மஸ்க் அறிவிப்பு!
எலான் மாஸ்க் அவர்களின் நியூராலிங்க் நிறுவனம் இரண்டாவது நபருடைய மூளைக்குள் பிசிஐ சிப் பொருத்தப்பட்டத்தை அறிவித்த எலான் மஸ்க் அவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 8 பேருக்கு அவர்களுடைய மூளைக்குள் பிசிஐ சிப் பொருத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் அவர்களின் நியூராலிங்க் நிறுவனம் மனிதனின் மூளையை கணிப்பொறியுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் பிசிஐ(BCI) எனப்படும் சிப்பை உருவாக்கி மனிதனின் மூளைக்குள் பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது.
முதல் கட்டமாக நியூராலிங் நிறுவனம் குரங்குகளுக்கு இந்த சிப்பை பொருத்தி சோதனை செய்து வந்தது. இதையடுத்து இரண்டாம் கட்டமாக மனிதனின் மூளைக்குள் சிப்பை பொறுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் நியூராலிங் நிறுவனம் பக்கவாதம் ஏற்பட்ட நபருடைய மூளையில் இந்த சிப்பை பொருத்தி சோதனை செய்தது.
இதையடுத்து மூளையில் சிப் பொறுத்தப்பட்ட நோலண்ட் என்ற நபர் கணினியை தன்னால் தற்போது இயக்க முடிகின்றது என்று கூறியுள்ளார். மேலும் இந்த சிப் எவ்வாறு மூளையில் பொருத்தப்பட்டது என்பது குறித்து அவர் தெரிவித்த நிலையில் தற்பொழுது நியூராலிங்க் நிறுவனம் இரண்டாவது நபருடைய மூளைக்குள் சிப் பொருத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக எலான் மஸ்க் அவர்கள் “தற்பொழுது நியூராலிங்க் நிறுவனம் இரண்டாவது நபருடைய மூளையில் பிசிஐ சிப் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டாவது நபரின் மூளையில் சிப் பொருத்தப்பட்டதில் அவருடைய மூளையில் 400 எலக்ட்ரோடுகள் செயல்பட்டு வருகின்றது. மேலும் இரண்டாவது நபரின் மூளையில் பொருத்தப்பட்டுள்ள சிப்பில் இருந்து சிக்னல்கள் நன்றாக வருகின்றது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 8 நபரின் மூளைகளுக்குள் இந்த பிசிஐ சிப்பை பொருத்தி விடுவோம்” என்று எலான் மஸ்க் அவர்கள் கூறியுள்ளார்.
மனிதர்களின் மூளையில் இந்த பிசிஐ சிப் பொருத்தப்படுவதால் மனித மூளையின் செயல்பாடுகளை கணினியில் பதிவு செய்து கொள்ள முடியும். மேலும் மூளையின் நினைவுகள் மற்றும் அனுபவத்தை கணினியில் பதிவு செய்து வேண்டும் என்ற நேரத்தில் அதை பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் பல வேலைகளை எளிமையாக செய்ய முடியும்.