டிப்ளமோ முடித்தவர்களுக்கு 8000! டிகிரி முடித்தவர்களுக்கு 10000! அரசு அதிரடி அறிவிப்பு! 

Photo of author

By Sakthi

டிப்ளமோ முடித்தவர்களுக்கு 8000! டிகிரி முடித்தவர்களுக்கு 10000! அரசு அதிரடி அறிவிப்பு!
டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் 8000 ரூபாயும், டிகிரி அதாவது பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் 10000 ரூபாயும் வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில அரசு தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மகளிர் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருவது போலவே மகாராஷ்டிரா மாநிலத்திலும் தற்பொழுது மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் ஏகாந்த ஷிண்டே அவர்கள் மாணவர்களுக்கான ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது அம்மாநிலத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவர்கள் துவங்கி வைத்துள்ளார். அதன்படி பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு மாதம் 6000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
மேலும் டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு மாதம் 8000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. அதே போல பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு மாதம் 10000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த உதவித்தொகை ஒரு வருடம் வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.