8 ஆம் எண் என்பது ஒரு மனிதனை தாமதப்படுத்தி, பல தடைகளை கொடுத்து வேடிக்கை பார்க்கும். இந்த 8 ஆம் தேதியில் பிறந்தவர்கள் மிகவும் அமைதியாக தான் உண்டு தனது வேலை உண்டு என இருப்பார்கள். தன்மானம் மற்றும் வைராக்கியம் அதிகம் உள்ளவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கணவன் அல்லது மனைவியாக இருந்தால் அவர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
தோல் சம்பந்தமான பிரச்சனைகள், கழிவு பாதைகளில் பிரச்சனைகள், பற்கள் பிரச்சனை, தூக்கமின்மை, கால் வலி, மன அமைதி இன்மை ஆகிய பிரச்சனைகள் சற்று அதிகமாகவே இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இருக்கும். இந்த 8,26 ஆகிய எண்கள் அனைத்தும் சனியின் உடைய எண்களாகும்.
இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு குலதெய்வத்தின் மீது அதிக பக்தி இருக்கும். இந்த 8 ஆம் தேதியில் பிறந்த பெண் அல்லது ஆணிற்கு ஆண் குழந்தைகள் பிறந்தால் அந்த குழந்தையின் மீது அதீத அன்பை கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஏனென்றால் 8 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு ஆண் குழந்தை என்றால் அவ்வளவு பிரியம்.
8 ஆம் எண் என்பது நேர்மையை குறிக்கும். எனவே இந்த தேதியில் பிறந்தவர்கள் சட்டம் பயின்ற நீதிபதிகளாக இருப்பார்கள். கடல் கடந்து பிற மொழிகளை அறிந்து, தொழில் புரிபவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு என தனி முகவரி இல்லாமல் இருந்தாலும் கூட, பிற்காலத்தில் அனைவரும் அறியும் படி ஒரு முகவரியை உருவாக்க கூடியவர்கள் இவர்கள்.
இவர்களது வாழ்க்கையில் செய்யக்கூடிய அனைத்து செயல்களையும் சற்று தாமதமாக தான் செய்வார்கள். உதாரணமாக காலையில் எழுவது, உணவு உண்பது இது போன்ற செயல்களை கூட தாமதமாக தான் செய்வார்கள். இவர்களது வாழ்க்கை சற்று ஏற்ற தாழ்வுடன் தான் இருக்கும்.
மேலும் 8 ஆம் தேதியில் பிறந்தவர்கள் உடைகள், உணவு, பெற்ற தாய் தந்தை ஆகிய அனைத்தின் மீதும் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
26 ஆம் தேதி என்பது சந்திரனும் சுக்கிரனும் சேர்ந்து வருவது. இந்த தேதியில் பிறந்தவர்கள் பெண்களாக இருந்தால் கண்டிப்பாக கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் என்று ஜோதிடம் கூறுகிறது. ஆண்களாக இருந்தால் மனைவியின் சொத்தை அனுபவிக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு புணர்பு தோஷம் என்பது இருக்கும். எனவே இவர்கள் ஏதேனும் பெருமையாக ஒன்றை கூறிவிட்டால் அது நடக்காமல் போய்விடும். அதாவது இவர்கள் ‘நான் நாளை கண்டிப்பாக இதனை செய்து விடுவேன்’ என்று பெருமையாக கூறினால், அதில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டு அது நடக்காமலேயே போய்விடும்.
காலதாமதம் என்பதும் இவர்களிடம் அதிகமாக இருக்கும். சந்திரன், சனி, சாரதாம்பாள் ஆகிய கடவுள்களை இந்த 26 ஆம் தேதி பிறந்தவர்கள் வழிபடுவது மிகவும் சிறப்பு. இந்தப் பலன்கள் அனைத்தும் 8,17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த அனைவருக்கும் பொருந்தும். ஏனென்றால் இந்த எண்களின் கூடுதல்கள் என்பது 8 தான்.