விக்கிரவாண்டி தொகுதியில் 83 சதவிகித வாக்குப்பதிவு! அதிமுக தொண்டர்கள் தேர்தலை புறக்கணிக்கவில்லையா?

Photo of author

By Janani

விக்கிரவாண்டி தொகுதியில் 83 சதவிகித வாக்குப்பதிவு! அதிமுக தொண்டர்கள் தேர்தலை புறக்கணிக்கவில்லையா?

தற்பொழுது நடைபெற்ற விக்கிவாண்டி இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு கிட்டத்தட்ட 83 சதவீதத்தை கடந்துள்ளது.இது தான் இந்த தொகுதியில் பதிவான அதிகபட்ச ஓட்டு சதவீதம் ஆகும். இந்நிலையில் வரும் ஜூலை 13-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலை தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுக புறக்கணித்து இருந்தது.ஆனால் மற்ற கட்சிகள் தேர்தலை எதிர் கொண்டன .அதிலும் குறிப்பாக திமுக,பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கிடையே யார் இந்த தொகுதியை பிடிப்பது என்று கடுமையான போட்டி நிலவியது.

இதற்கு முன்பு தமிழகத்தில் நடந்த பெரும்பாலான தேர்தல்களிலும் அதிமுக-வானது தோல்வியே பெற்றிருந்தது. அதனால் தொண்டர்களும் வருத்தத்தில் இருந்தனர்.இந்த நிலையில் தான் விக்கிவாண்டி இடைத்தேர்தலை நாம் புறக்கணித்து விடலாம் என அதிமுக தலைமை முடிவு எடுத்தது.

மேலும் பாமக மற்றும் நாதக என இரண்டு கட்சிகளும் அதிமுக தங்களுக்கு ஆதரவு தருமாறு வெளிப்படையாக கோரிக்கை விடுத்திருந்தன.ஆனால் எடப்பாடி பழனிசாமி யாருக்கும் ஆதரவு தெரிவிக்க முடியாது என கூறினார்.

இதனால் அதிமுக உறுப்பினர்களும் ஓட்டு போடாமல் தேர்தலை புறக்கணித்து விடுவார்கள் என்ற வகையில் செய்தி ஊடகங்களில் பரவியது.இந்த கருத்து தற்பொழுது தவிடு பொடியாகியுள்ளது.ஏனெனில் நேற்று நடந்த இடைத்தேர்தல் வாக்குபதிவில் 83 சதவிகித வாக்கானது அங்கு பதிவாகியுள்ளது.

பதிவான வாக்கு சதவீதத்தை பார்க்கையில் அதிமுக தொண்டர்கள் எந்த கட்சிக்கு வாக்கு அளித்திருப்பார்கள் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.மேலும் தலைமை சொன்ன கருத்தை தொண்டர்கள் ஏற்கவில்லையா என்ற சந்தேகமும் கிளம்புகிறது.

அதே நேரத்தில் அதிமுக தொண்டர்கள் யாரை ஆதரித்திருப்பார்கள் என்ற குழப்பமும் நிலவி வருகிறது. ஜூலை 13 ஆம் தேதி தேர்தல் முடிவு வரும் போது இவர்கள் எந்த கட்சியை தேர்ந்தெடுத்து இருப்பார்கள் என்பதற்கான விடை தெரிந்து விடும்.