உலக கோப்பையை கண்முன்னே கொண்டு வந்த 83! பயங்கர ட்ரெண்டிங் செய்யும் ரசிகர்கள்!
கிரிக்கெட் என்றாலே பிடிக்காத நபர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். இது கடந்த பல வருடங்களாகவே நமது அன்றாட வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்வு தான். இந்த விளையாட்டு தொலைகாட்சியில் ஓடும் நேரத்தில் யாரும் வீட்டிலிருந்து வெளியே கூட செல்லாமல் உட்கார்ந்து பார்க்கும் சில ரசிகர்கள் கூட அதற்கு இருக்கிறார்கள்.
அப்படி ஒரு காலத்தில் தான் அதன் வரலாறு மாற்றப்பட்டது. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 1983ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி இந்திய அணிக்கு மிக முக்கியமான நாளாக மாறியது. உலகக்கோப்பை போட்டிகளில் அதுவரை அரையிறுதி கூட நெருங்காத இந்தியா முதல் முதலாக அன்று ஒரே நாளில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மிக்க பலம் வாய்ந்த அணியான வெஸ்ட் இண்டீஸ் அணியை இறுதிப்போட்டியில் சந்தித்த கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி மிக அபாரமாக விளையாடி அதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்தது. மேலும் உலக கோப்பையையும் முதல் முதலாக இந்தியா கைப்பற்றி வரலாறு படைத்தது.
எனவே அதனை யாராலும் மறக்க முடியாத ஒரு சரித்திர நிகழ்வாக இன்றும் கொண்டாடப்படுகிறது. அதனை அப்படியே கண்முன் கொண்டுவரும் விதமாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்தான் 83. இயக்குநர் கபீர் கான் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். கபில்தேவ் ஆக ரன்வீர் சிங், தமிழக வீரர் ஸ்ரீகாந்த் ஆக நடிகர் ஜீவா, மான்சிங் கதாபாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.
1983 ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்தவர்கள் போலவே அச்சு அசல் நடித்துள்ளனர். அந்த ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை வென்றதும், அதனுடன் சேர்ந்து கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றையும் அடிப்படையாக வைத்துதான் இந்த கதையின் கரு உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த படத்தில் தீபிகா படுகோன் உள்ளிட்ட நபர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உலக கோப்பையை இந்திய அணி வென்றதை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதை கிரிக்கெட் ரசிகர்கள் தலை மீது வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த திரைப்படம் டிசம்பர் 24ஆம் தேதி வெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என்ற நான்கு மொழிகளிலும் வெளியிடப்படுகிறது. தற்போது இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களால் மிகவும் ட்ரெண்டாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.