Union Ministry: 8வது ஊதியக் குழு அமைக்கப்பட மாட்டது மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி திட்டவட்ட அறிவிப்பு.
இந்திய நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊளியர்களுக்காக ஊதியக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பில் மாற்றங்கள் தொடர்பாக பரிந்துரைகள் செய்து வருகிறது. இந்த குழு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும். இந்தியாவில் தற்போது 7 வது ஊதியக்குழு அமைத்து பத்து ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்கிறது.
எனவே 8 வது ஊதியக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசு ஊழியர்களால் முன் வைக்கப்பட்டது. இந்த நிலையில் பிப்ரவரி மாதம்
2024-25 ஆண்டுக்கான பச்ஜெட் தாக்கலில் நிர்மலா சீதாராமன் இது தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற மன்ற கூட்டத்தொடரில் இந்த ஆண்டு ஊதியக் குழு அமைப்பது தொடர்பாக ராஜ்யசபா எம்.பி.க்கள் ஜாவேத் அலி கான் மற்றும் ராம்ஜி லால் சுமன் ஆகியோர் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.
அதற்கு பதிலாக மத்திய இணை நிதி அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக ஊதியக் குழு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் 8 வது ஊதியக் குழு அமைப்பது தொடர்பான எந்த திட்டமும் தற்போது இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். எனவே மத்திய அரசிடம் 8 வது ஊதியக்குழு அமைக்க அரிசிடம் பரிந்துரை செய்து இருக்கிறார்கள் மத்திய ஊழியர் சங்கங்கள்.