எதிர்வரும் 2 மணி நேரத்தில் இந்த 9 மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மேல் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ராமநாதபுரம், விருதுநகர், ஈரோடு, நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கை செய்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.

கேரளா மற்றும் அதன் கடலோர பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் லேசான அல்லது மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தான் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையின் காரணமாக, தேனி விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. விருதுநகரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.