ஜெயலலிதாவின் வெங்கல சிலை திறப்பு! முதல்வருடன் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்பு!

Photo of author

By Sakthi

சென்னை வெலிங்டன் கல்லூரியில் அமைத்திருக்கும் ஜெயலலிதாவிடம் வெங்கலசிலை திறந்து வைக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் அவருடைய நினைவிடம் நேற்றைய தினம் தமிழக மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இன்று காலை சென்னை போயஸ் தோட்டத்தில், ஜெயலலிதாவின் வேதா இல்லமும் திறந்து வைக்கப்பட்டது.

ஆனால் தற்சமயம் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்துக்குள் பொதுமக்களை செல்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருப்பதன் காரணமாக, மக்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. மெரினா கடற்கரை சாலையில் இருக்கக்கூடிய லேடி வெலிங்டன் கல்லூரியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை திறந்து வைத்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை திறப்பின் போது நடிகர் அஜித்குமார் உதவியால் உருவாக்கப்பட்ட டிரோன் பயன்படுத்தப்பட்டது. ஜெயலலிதா அவர்களின் மீது பச்சை நிறத்தில் இருந்த போர்வையை டிரோன் மூலமாக முதலமைச்சர் அகற்றிய போது அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் டிரோன் மூலமாக சிலையின் மீது மலர் வீசப்பட்டது.