உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 9 பேர் இன்று பதவியேற்பு!

Photo of author

By Sakthi

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இருக்கின்ற கோவிந்தராஜுலு, சந்திரசேகரன், வீராசாமி, சிவஞானம், கணேசன், இளங்கோவன், ஆனந்தி, சுப்பிரமணியன், கண்ணம்மாள், சண்முகசுந்தரம், சதீஷ்குமார், சுகுமார், முரளி சங்கர், குப்புராஜ், மஞ்சுளா, ராம்ராஜ், நல்லையா, தமிழ்ச்செல்வி, உள்ளிட்டோரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கான முன்மொழிவு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் குழு ஒப்புதல் வழங்கியிருந்தது.

இந்த சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக இந்த 9 பேரும் இன்று பதவியேற்கவிருக்கிறார்கள். 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 3ம் தேதி கூடுதல் நீதிபதிகளாக பதாவியேற்றார்கள் இவர்கள் கடந்த வாரம் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குநடுவே சுந்தர் மோகன், கே குமரேஷ் பாபு, உள்ளிட்டோரை கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருக்கிறார்.

அதாவது சென்னை உயர்நீதிமன்றத்திலுள்ள காலியிடங்களை நிரப்பும் விதத்தில் வழக்கறிஞர்களாக இருந்த என். மாலா, சுந்தர் மோகன், கே .குமரேஷ் பாபு, எஸ் .சௌந்தர், அப்துல் ஹமீத், ஆர். ஜான் சத்யன் உள்ளிட்டோர் நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி பரிந்துரை செய்தது.

இதில் சுந்தரம் மோகன், கே. குமரேஷ்பாபு, உள்ளிட்டோரை கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருக்கிறார்.

இவர்களின் நியமனங்கள் மூலமாக நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்திருக்கிறது. காலியிடங்கள் ௧௭ என குறைந்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒதுக்கப்பட்ட ஒட்டுமொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75 என்று சொல்லப்படுகிறது.