மாநிலங்களவையில் 9 பேர் புதிதாக எம்.பி.களாக பதவியேற்பு… மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பதவியேற்பு…
இன்று(ஆகஸ்ட்21) மாநிலங்களவையில் 9 பேர் புதிதாக மாநிலங்களவை உறுப்பானராக பதவியேற்று கொண்டுள்ளனர். இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களும் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர் அவர்கள் இரண்டாவது முறையாக இன்று மாநிலங்களை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். ஜெய்சங்கர் அவர்கள் கடந்த 2019ம் ஆண்டு முதன் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படார். இந்நிலையில் இன்று இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக ஜெய்சங்கர் அவர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
ஜெய்சங்கர் அவர்கள் மட்டுமில்லாமல் குஜராத் மாநிலத்தை பாபுபாய் ஜெசங்க்பாய் தேசாய், கேஸ்ரீதேவ்சிங் திக்விஜய் சங் ஜாலா ஆகியோரும் மேற்குவங்கம் மாநிலத்தூ சேர்ந்த நாகேந்திர ராய் என மூன்று பேர் பா.ஜ.க கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்க பதவியேற்றாக் கொண்டனர்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பாக டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர் ராய், பிரகாஷ் சிங் பராய்க், சமிருள் இஸ்லாம் ஆகிய ஐந்து பேரும் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்றுக் கொண்ட புதிய 9 மாநிலங்களை உறுப்பினர்களுக்கும் சேர்மேன் ஜெக்தீப் தன்கார் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜெய்சங்கர் அவர்கள் ஆங்கில மொழியில் பதவியேற்றுக் கொண்டார். டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர் ராய் ஆகியோர் பெங்காலி மொழியில் பதவியேற்றுக் கொண்டனர்.