தமிழகத்தில் நேற்றைய நோய் தொற்று பாதிப்பு உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் நேற்றைய நோய்த்தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,48,252 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 16 ,234 ஆண்கள் 2,325 பெண்கள் என்று ஒட்டுமொத்தமாக 28,561 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் அதிகபட்சமாக 7,120 பேரும் கோயம்புத்தூரில் 3390 பேரும் செங்கல்பட்டு 2196 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

குறைந்தபட்சமாக சிவகங்கையில் 138 பேரும் பெரம்பலூரில் 123 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நேற்று வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 13 பேரும் உட்பட 12 வயதிற்கு உட்பட்ட 905 குழந்தைகளுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 4,064 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் இதுவரையில் 30,42,796 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் 12 வயதுக்கு உட்பட்டவர் 1,14,296 குழந்தைகளும் 60 வயதிற்கு மேற்பட்ட 4,40,479 முதியவர்களும் இடம் பிடித்திருக்கிறார்கள்…

தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரத்தின் அடிப்படையில் 9,286 பேர் மருத்துவமனைகளில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் இதில் 4,380 பேர் ஆக்சிஜன் வசதி படுக்கை கொண்ட வார்டுகளிலும், 10,32 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நோய்த்தொற்றுக்கு தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 20 பேரும் தனியார் மருத்துவமனையில் 19 பேரும் இன்று 39 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று பலியாகியிருக்கிறார்கள். அதிகபட்சமாக சென்னையில் 14 பேரும், செங்கல்பட்டு 5 பேரும், கோயமுத்தூர், ஈரோடு, திருவள்ளூர், தூத்துக்குடி, உள்ளிட்ட பகுதிகளில் தலா 3 பேரும் கன்னியாகுமரி, தஞ்சாவூரில் தலா 2பேரும், நாமக்கல் ராணிப்பேட்டை, விருதுநகர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவரும் என 12 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் இதுவரையில் ஒட்டுமொத்தமாக 37,112 பேர் நோய்த் தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள்.

நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து நேற்றைய தினம் 19,978 டிஸ்சார்ச் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக சென்னையில் 8,500 பேரும் செங்கல்பட்டில் 1,952 பேரும், கோயம்புத்தூரில் 1189 பேரும், அடங்குவர். இதுவரையில் 28,26,479 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நோய் பாதித்த 1,29,705 பேர் குணமடையாமல் சிகிச்சையும் இருக்கிறார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.