இங்கிலாந்தில் உச்சமடைந்த நோய் தொற்று பாதிப்பு!

Photo of author

By Sakthi

இங்கிலாந்தில் உச்சமடைந்த நோய் தொற்று பாதிப்பு!

Sakthi

இங்கிலாந்து நாட்டில் நோய்த்தொற்று பரவலால் உண்டாகும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, கடந்த சில நாட்களாக அங்கு நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உலக அளவில் நோய்த்தொற்று பரவல் பாதிப்பில் இங்கிலாந்து தற்சமயம் நான்காவது இடத்தில் நீடித்து வருகிறது, இங்கிலாந்தில் கடந்த ஒரு சில வாரமாக 50 ஆயிரம் முதல் 1லட்சம் நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதியாகி வருகிறது.

நேற்றைய தினம் இங்கிலாந்து நாட்டில் 98515 பேர் இந்த நோய் தொற்றால் பாதிப்படைந்து இருக்கிறார்கள், இதன் மூலமாக அங்கே நோய்தொற்று பாதிக்கப்பட்டோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 1 கோடியே 22 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்து இருக்கிறது.

நோய்தொற்று பாதிப்பால் 143 பேர் பலியாகி இருக்கிறார்கள் இதன் காரணமாக, அங்கே இதுவரையில் நோய் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது.

அதோடு நோய் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 99.61 லட்சத்தை கடந்தது. தற்சமயம் 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று அந்த நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், அந்த நாட்டில் புதிய வகை நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த பொது கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்திருக்கின்றன. பல பகுதிகளில் இரவு கேளிக்கை விடுதிகள் மூடப்பட வேண்டும், மதுபானக் கூடங்கள் உணவகங்கள் திரையரங்குகளில் 6 பேருக்கு மேல் அனுமதிக்கக்கூடாது, அரங்குகளில் 30 பேருக்கு மேல் மற்றும் வெளி அரங்குகளில் 50 பேருக்கு மேல் கூட கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.