9ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை! காரணம் என்ன?

0
163

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுக்கா ராமநாயுடு கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் தாமு ஓட்டுனராக பணியாற்றி வரும் இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்தார். இவர் கடந்த வருடம் நோய் தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு கங்கோத்திரி 4 பெண் குழந்தைகள் இருக்கின்றன.

கங்கோத்திரி கீச்சலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தன்னுடைய தாய் உயிரிழந்த துக்கம் காரணமாக, அவர் உயிரிழந்ததிலிருந்து அதிக அளவிலான மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மாணவி கங்கோத்ரி நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாருமில்லாத நேரமாக பார்த்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் பொதட்டூர் பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள்.

இந்த தகவலினடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அதோடு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் மாணவியின் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள்.

அதோடு மாணவி எந்த காரணத்தை முன்வைத்து தற்கொலை செய்து கொண்டார்? இது தற்கொலையா? அல்லது பள்ளியில் ஏதாவது பிரச்சனையா? அல்லது குடும்பத்தில் ஏதாவது பிரச்சனையா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தங்களுடைய விசாரணையை முடிக்கி விட்டிருக்கிறார்கள்.

Previous articleஇளம் பெண்ணை வீடு புகுந்து கடத்திய கும்பல்! அதிரடியாக களமிறங்கி மீட்ட காவல்துறையினர்!
Next articleஎடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு சிபிஐ விசாரணையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! ஆனால்…!