9ம் கட்ட கீழடி அகழாய்வு பணி… பாம்பு தலை கொண்ட உருவம் கண்டுபிடிப்பு!!

0
102

 

9ம் கட்ட கீழடி அகழாய்வு பணி… பாம்பு தலை கொண்ட உருவம் கண்டுபிடிப்பு…

 

கீழடியில் தற்பொழுது நடைபெற்று வரும் 9ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் பாம்பு தலை கொண்ட உருவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் தற்பொழுது 9ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த அகழாய்வில் 9 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

 

இந்த அகழாய்வு பணியில் 9வது குழியில் சுமார் 7 அடியில் தோண்டப்பட்டது. அப்போது பானை ஓடுகள் கிடைத்தது. இந்த பானை ஓடுகளை பிரித்து பிரித்து வகைபடுத்திய போது சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலை கொண்ட ஒரு உருவமும் கண்டறியப்பட்டது.

 

இந்த பாம்பின் தலை போன்ற உருவத்தில் பாம்பின் கண்களும் பாம்பின் வாயும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சுடு மண்ணால் செய்யப்பட்ட பாம்பின் உருவமானது சொர சொரப்பான மேற்பரப்புடன் காணப்படுகின்றது. மேலும் அதன் மேற்பரப்பில் சிவப்பு வண்ணத்தில் வண்ணம் உள்ளது.

 

இந்த பாம்பு உருவம் 6.5 செ.மீ நீளம் கொண்டதாகவும், 5.4 செ.மீ அகலம் கொண்டதாகவும், 1.5 அளவு பருமன் கொண்டதாக உள்ளது.

 

இந்த பாம்பு உருவத்தை தவிர அகழாய்வு பணியில் சுடு மண்ணால் செய்யப்பட்ட பந்து, வட்டச்சில்லுக்கள் ஆகியவையும் கிடைத்துள்ளது. மாநில தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் அவர்கள் இந்த தகவலை தெரிவித்தார்.

 

Previous articleதமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்!!
Next articleஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு… எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் சுட்டு கொலை… நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்!!