உலக அளவில் 9 வது இடம்… மூன்று நாடுகளில் முதல் இடம் பிடித்த மாமன்னன்… இயக்குநர் மாரி செல்வராஜ் மகிழ்ச்சி!!

0
118

 

உலக அளவில் 9 வது இடம்… மூன்று நாடுகளில் முதல் இடம் பிடித்த மாமன்னன்… இயக்குநர் மாரி செல்வராஜ் மகிழ்ச்சி..

 

உலக அளவில் டாப் 10 படங்களில் மாமன்னன் திரைப்படம் 9வது இடத்தையும் அதே சமயம் மூன்று நாடுகளில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. இதனால் இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

 

நடிகர்கள் உதய்நிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி வெளியான வெளியான மாமன்னன் திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கினார். ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக நடிகர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் மாமன்னன் திரைப்படத்தை தயாரித்திருந்தார். மேலும் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் மாமன்னன் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

 

மாமன்னன் திரைப்படத்தை பார்த்த அரசியல் பிரபலங்களும், திரைப் பிரபலங்களும் இந்த படத்தை பற்றி பாராட்டி பேசினர். மேலும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்த வடிவேலு, உதய்நிதி, பகத் பாசில் மூவரையும் மக்கள் பாராட்டினர். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை ரவீனா ரவி அவர்களின் கதாப்பாத்திரங்களுக்கு மீம்ஸ்களும் பரவியது. இன்னும் சில பகுதிகளில் மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது.

 

வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் வெற்றியடைந்த மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூலை 27ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் தளத்தில் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகின்றது என்று இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் அறிவித்திருந்தார். தொடர்ந்து மாமன்னன் திரைப்படம் பற்றி மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகின்றது.

 

இதையடுத்து மாமன்னன் திரைப்படம் உலக அளவில் 9 நாடுகளில் டாப் 10 இடங்களில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. ஐக்கிய அரபு நாடுகள், கத்தார், இந்தியா, மலேசியா, பஹ்ரைன், சிங்கப்பூர், ஓமன், மாலத்தீவுகள், இலங்கை என 9 நாடுகளில் டாப் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்தியா, ஐக்கிய அரபு நாடுகள், கத்தார் ஆகிய மூன்று நாடுகளில் முதலிடத்தை பிடித்துள்ளது.

 

இதைப் பற்றி மாமன்னன் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் “நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உலக அளவிலான பத்து படங்களில் மாமன்னன் திரைப்படம் 9வது இடத்தை பிடித்துள்ளது. அதில் 3 நாடுகளில் முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும் 6 நாடுகளில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான முதல் வாரத்திலேயே 1.2 மில்லியன் மக்கள் மாமன்னன் திரைப்படத்தை பார்த்துள்ளனர்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

 

Previous articleபுதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்த ரெட்மி… இதன் விலை இவ்வளவு தானா?
Next articleபனிப்பாறைக்குள் சிக்கிய மலையேற்ற வீரர்… 37 ஆண்டுகளுக்கு பிறகு சடலமாக மீட்பு…