12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் அதேபோல 10ம் வகுப்பு பொது தேர்வை எழுதிய 9,12,620 மாணவர்களில் 8,21,994 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.
இந்த சூழ்நிலையில் பத்து மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேற்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியிருந்தது.
இந்த சூழ்நிலையில், மாநில அரசின் அதிகார வரம்பின் கீழ் செயல்படும் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அதனடிப்படையில், பொதுப்பிரிவில் 31 சதவீதமும் ,எஸ் டி பிரிவில் 1 சதவீதமும், எஸ் சி பிரிவில் 18 சதவீதமும், எம் பி சி பிரிவில் 20 சதவீதமும், பிசிஎம் பிரிவில் 3.5 சதவீதமும் மற்றும் பிசி பிரிவில் 26.5% இட ஒதுக்கீட்டை நிச்சயமாக பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதோடு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது முதலில் பொதுப் பிரிவுக்கான 31 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் எனவும், மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் எனவும், கூறப்பட்டுள்ளது.
இதில் எல்லா பிரிவினருக்கும் ஏற்ற விதத்தில் பாகுபாடில்லாமல் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றும், பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இதற்கு நடுவே மேல்நிலைப் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், மாணவர்களின் சேர்க்கை நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து உறுதிப்படுத்துவதற்காக அந்த உத்தரவை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது.