ஸ்ரீ வராகி அம்மன் நவராத்திரி வழிபாடு!

0
234

ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியின் கையில் இருக்கின்ற பஞ்ச பானங்களில் இருந்து தோன்றியவள் தான் ஸ்ரீ மகா வராகி எனப்படும் அம்மன்.

படைகளுக்கு தலைவியான அன்னையை பாதுகாப்பவாளாக விளங்கும் வராக முகத்துடன் உள்ளதால் வராஹி எனப்படுகிறார். பிராக்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டா, என்ற சப்த அன்னைகளில் இவள் 6வதாக பூஜிக்கப்படுகிறாள்.

ஒவ்வொரு மனிதனின் உடலிலும் இருக்கும் 6 ஆதார சக்கரங்களில் நெற்றியில் 2 கண் இருக்கும் உருவங்களுக்கிடையில் இருக்கின்ற ஆக்ஞா சக்கரப் பகுதிக்கு இவர்தான் தேவதை என சொல்லப்படுகிறது.

ஆனி மாதம் சுக்ல பட்சம் பிரதம திதி முதல் நவமி வரையில் இருக்கின்ற 19 நாட்கள் வராகி நவராத்திரி எனப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த நவராத்திரியின் நடுவில் நிகழும் பஞ்சமி திதியான நாளன்று வராகி அம்மனை உபவாசிக்க சிறப்பான நாள் என சொல்லப்படுகிறது.

இந்த நாட்களில் வராஹியை அபிஷேகம் அர்ச்சனை பூஜை மந்திரம் செய்து பாராயணம், ஹோமம், நடத்தி வழிபாடு செய்யலாம். இதன் காரணமாக, சிறந்த வாக்கு சக்தி கிடைக்கும். ஜாதகப்படி செவ்வாய் ராகு மற்றும் கேது வெளியிட்ட கிரகங்களால் உண்டாகும் தோஷங்கள் விலகும். எங்கும், எதிலும், பாதுகாப்பு கிடைக்கும்.

அதோடு ஸ்ரீ வாராஹி அம்மனை வழிபடுபவர்களுக்கு அடுத்தவர்கள் செய்யும் தீய மந்திரங்களாலும் மற்றும் செய்வினைகளாலும் எந்த ஒரு பாதிப்பும் உண்டாகாது. இதனால் தான் வாராஹிகாரனோடு வாதிடாதே என சொல்லப்படுகிறது.

இந்த அம்மனை வழிபடுபவர்கள் தங்களுடைய பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆத்திரத்தால் உணர்ச்சிவசப்பட்டு யாரையும் சபிக்கவோ, திட்டவோ, கூடாது. ஏனென்றால் அது உடனே பலித்து பலன் கொடுத்து விடும். பிறகு வருத்தப்பட நேரலாம் வராகி வழிபாட்டுக்கு மட்டும் இந்த சிறப்பு இருக்கிறது.

வராகி நவராத்திரியின் 9 நாட்களும் ஸ்ரீ மகா வராகியின் படத்தை வைத்து அம்மனின் வலது பக்கத்தில் தாமரை தண்டு அல்லது வாழைத்தண்டால் தேர்வு செய்து நெய் தீபம் ஏற்றி மஞ்சள் பட்டு துணி சாத்தி வழிபடலாம்.

அப்போது பஞ்சம்யை நம, தண்டநாதாயை நம, சங்கேதாயை நம, சமயேஸ்வர்யை நம, சமய சங்கேதாயை நம, வராஹியை நம, போத்ரிண்பை நம, ஸ்ரீவாயை நம, வார்த்தாள்யை நம, மகாசேனாயை நம, ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம, அக்ரின்பை நம என்று 12 மந்திரங்களை சொல்ல வேண்டும் அதோடு வாராகியை சிவப்பு புஷ்பத்தால் பூஜை செய்ய வேண்டும்.

தோல் உரிக்கப்படாத கருப்பு உளுந்தால் செய்த வடையும், மிளகு சேர்த்து தயிர்சாதமும், சர்க்கரைவள்ளி கிழங்கும், சுக்கு சேர்த்த ஆணகமும், நிவேதனம் செய்ய வேண்டும். அதன் பிறகு முதலில் தெரிவித்த வந்தே வராக வக்த்ரம் என்ற மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்

இப்படி முறையாக பக்தியுடன் வராகி அம்மனை நவராத்திரி நாட்களான 9 தினங்களும் பூஜை செய்பவர்கள் அவர்களுடைய குடும்பத்தில் இருப்பவர்கள் உள்ளிட்டோர் நோய், எதிரி மற்றும் அனைத்து ஆபத்துகளில் இருந்தும் பாதுகாக்கப்படுவார்கள்.

தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஜூன் மாதம் 28ஆம் தேதி ஆரம்பமானது. தஞ்சை பெரிய கோவிலில் இருக்கின்ற வராகி அம்மனுக்கு வருடம் தோறும் 10 நாட்கள் இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படும்.

இதில் அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், அலங்காரமும், நடைபெறும். இதன்படி இந்த வருடம் ஆஷாட நவராத்திரி விழா ஜூன் மாதம் 28ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் ஆரம்பமானது.

இதனைத் தொடர்ந்து வாராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரமும், 29ஆம் தேதி மஞ்சள் அலங்காரமும், 30ஆம் தேதி குங்கும அலங்காரமும், ஜூலை மாதம் 1ம் தேதி சந்தன அலங்காரமும், 2ம் தேதி தேங்காய் பூ அலங்காரமும், 3ம் தேதி மாதுளை அலங்காரமும், 4ம் தேதி நவதானிய அலங்காரம், 5ம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 6ம் தேதி கனி அலங்காரமும், 7ம் தேதி காய்கறி அலங்காரமும், நடைபெறவிருக்கின்றன.

விழா நிறைவு நாளான 8ம் தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு நாகாசுரம், கரகாட்டம். ஒயிலாட்டம், வான வேடிக்கையுடன் 4 ராஜ வீதிகளிலும் வீதி உலாவும் நடைபெறவிருக்கின்றன.

Previous articleஆங்காரத்தில் நிற்கும் இயக்குனர் லீனா மணிமேகலை! உன்ன காளிதேவி சும்மா விடமாட்டாள்??
Next articleபெங்களூரு ஏர் இந்தியா நிறுவனத்தின் சூப்பர் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here