அடுத்த என்கவுன்டர் தமிழகத்திலா? அதுவும் விசிக நிர்வாகியா?
சமீபத்தில் தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவமானது நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுந்த வண்ணமே இருந்தன.
இதனையடுத்து வழக்கு தொடர்ந்த காவல் துறையினர் சம்பவம் நடந்த பகுதியிலிருந்த சி.சி.டி.வி கேமரா மூலமாக குற்றவாளிகளை கண்டு பிடித்து கைது செய்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் இது பல நாட்களாக திட்டமிட்டு நடத்தப்பட்ட குற்ற சம்பவம் என்பது உறுதியானது. இதனையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களான ஆரிஃப். நவீன், சிவா, சென்னகேசவலு ஆகியோர் பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட அதே இடத்தில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்
இந்த என்கவுன்டர் மூலம் குற்றவாளிகள் கொல்லப்பட்டதால் உடனடி நீதி வழங்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் பெரும்பாலான மக்கள் கொண்டடி வருகின்றனர். மக்களின் இந்த கொண்டாட்டத்தின் மூலமாக எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
அதே நேரத்தில் இது போன்ற என்கவுன்டர் தீர்ப்புகள் தமிழகத்தில் நடைபெற்ற பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கும் கிடைக்குமா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வசதியான குடும்பத்தை சார்ந்தவர்களாக இருந்தாலோ? அரசியல் வாரிசாக இருந்தாலோ இது போல என்கவுன்டர் செய்வீர்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை இப்படி செய்வீர்களா? என்றும் கேட்டு வருகின்றனர். மேலும் இதை போலவே கொடுமையான குற்றத்தை செய்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த விசிக பிரமுகரை என்ன செய்ய போகிறீர்கள் என்றும் கேள்வி வலுத்து வருகிறது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள செல்லியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தான் மோகன்ராஜ். இவர், இளம்பிள்ளை பகுதியில் விசிக சார்பில் இயங்கி வரும் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்து வந்துள்ளார். இதன் மூலமாக ஆட்டோவில் ஏறும் பெண்களிடம் பேச்சு தந்து, அவர்களுடைய போன் நம்பரை தந்திரமாக வாங்கி வைத்து கொண்டு, பிறகு மிரட்டி தன் ஆசைக்கு பணிய வைத்துள்ளார். இப்படியே அந்த பகுதியில் 40 க்கும் மேற்பட்ட பெண்களை மோகன்ராஜ் நாசம் செய்துள்ளார்.
இதனையடுத்து இவரை கைது செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கல்யாணம் ஆன பெண்கள் தவிர, பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவியும் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. தன்னிடம் சிக்கும் பெண்களை அவருடைய நண்பர்களுக்கும் விருந்தாக்கி உள்ளார் இந்த மோகன்ராஜ். மேலும் இவனுக்கு பயந்து ஒரு சில பெண்கள் ஊரை விட்டே போய்விட்டார்கள் என்பதும் அந்த பகுதியில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், தான் பதவி வகிக்கும் விசிக கட்சி பெயரை சொல்லி தான் பல பெண்களை இவர் மிரட்டி இருக்கிறார் என்றும் விசாரணையில் தெரிய வந்தது.
தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பதவியில் இருக்கும் இவரை போன்ற ஆட்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஹைதரபாத்தில் பெண் மருத்தவரை எரித்து கொன்ற குற்றவாளிகள் மீது நடத்தப்பட்ட என்கவுன்டர் போல இவர் மீதும் நடத்தப்படுமா? என்றும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.